Friday, June 9, 2017

சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் இன்று துவங்கியது தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டம்!


     தமிழக விவசாயிகள் சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து டெல்லியில் காத்துக்கிடந்தனர்.

இதை தொடர்ந்து இன்று (09/06/2017) காலை சரியாக 9:30மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் வருகிற 13ம் தேதி வரை நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் திரு .அய்யாகண்ணு அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட  விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து தற்பொழுது அந்த போராட்ட களத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்ற  சமூக ஆர்வலர்களும் , பல பொது மக்களும்  கலந்துக்கொண்டனர்.

இந்த போராட்டம் தற்பொழுதும் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது