ஆண்மையை அதிகரிக்க செய்யும் அதிரை கடல் பகுதி மீன்கள்

அதிரை  கடல் பகுதியில் மீனவர்கள் கூரல் கத்தாழை, கொடுவா, காளை ஆகிய மீன்களை தனி வலை பயன்படுத்தி பிடிக்கின்றனர். இந்த மீன்கள் 10 முதல் 20 கிலோ எடை வரை இருக்கும்.மேலும் ஆண்மை குறைபாட்டை போக்குவதாக கருதப்படும் கூரல் கத்தாழை மீன்களின் நெட்டிகள், கிலோ ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூரல் மீன்களின் வயிற்றில் உள்ள நெட்டி என்ற உறுப்பை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு கிலோ நெட்டி ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இந்த மீன்களை வாங்குவதற்கு போட்டி அதிகம் இருக்கும். வாரம் ஒருமுறை கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் இங்கு வருகின்றனர். அமெரிக்கா, லண்டன், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு நெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வியாபாரிகள் ஆண் மீனை விட பெண் மீனுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கின்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி  கூறுகையில், கூரல் கத்தாழை மீன்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் 5 பெரிய நெட்டிகள் ஒரு கிலோ எடை இருக்கும். இது ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. பெண் நெட்டி ரூ.80 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. கூரல் கத்தாழை நெட்டிகள் வாங்குவதற்கு அதிக போட்டி உள்ளது.மேலும் கூரல் கத்தாழை நெட்டிகள் ஆண்மை குறைபாட்டை நீக்கும் மருந்து தயாரிக்கவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள ஸ்டார் ஓட்டல்களில் உயர் ரக சூப் தயாரிக்கவும் இந்த நெட்டிகளை பயன்படுத்துகின்றனர்’’ என்றார்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது