Tuesday, June 6, 2017

தஞ்சையில் நேற்றுவரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய திரு பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கைது!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு  தனி தீவு போல் உள்ளது என்ற தகவலை அடுத்து நேரில் சென்று பார்த்து அங்குள்ள நிலைமை அறிய தலைவர் P R பாண்டியன் சங்க நிர்வாகிகளோடு பார்க்க சென்ற போது கும்பகோணம் அருகே பைபாஸ் சாலையில் ஏராளமான காவல்துறையினர் வந்து தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

திரு பி.ஆர். பாண்டியன் அவர்களின் தந்த செய்தி...

திருவாருர் குடவாசல் வழியாக கதிராமங்கலம் செல்லும் என்னை தடுத்து கைது செய்ய கும்பகோணம் DSP தலைமையிலான காவல்துறையினர் முன்னும் பின்னும் பின் தொடர்ந்து வந்து கொண்டுள்ளனர்.

என் வாகனத்தை பின் ெதாடர்ந்து டி.பி.கே.இராஜேந்திரன் வாகனம் வந்து கொண்டுள்ளது.

போராட்டம் நடத்த செல்லவில்லை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பார்க்க கூட அனுமதிக்க மறுப்பது நியாயமில்லை எனக்கு சர்திப்பதற்க்கு தமிழக முதல்வர் அனுமதி தர வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது