Tuesday, June 6, 2017

தஞ்சையில் விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம் முடிவுற்றது!

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் 5 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (05-06- 2017) முடிவுற்றது

பிறகு போராட்ட அறிவிப்புகளை வெளிட்டுள்ளோம்.

தமிழக அரசு காவிரி நீர் ஜூன் 12ல் திறப்பதற்க்கான வகையில் கர்நாடக அரசிடம் தண்ணீர் பெறுவதற்க்கு மத்திய அரசின் மூலம் உரிய முயற்சிகளை மேற்க்கொள்ள அச்சப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் கர்நாடாக அனைகளின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு தான் தொடர்ந்து 2000ம் கண அடி தண்ணீர் விடுவிக்க பல முறை உத்தரவிட்டுள்ளது. அதனை ஏற்க்க மத்திய அரசும், கர்நாடக அரசும் மறுக்கிற போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவோ, மத்திய அரசிடம் வலியுறுத்த வோ மறுப்பதும், அச்சப்படுவதும் வேதனையளிக்கிறது

ON GC விளை நிலங்களை பாலைவனமாக்க முயற்ச்சிப்பதையும், நெடு வாசல் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் மறுப்பதோடு காவல்துறையை ஏவிவிட்டு
கதிராமங்களத்தில் 144 தடை உத்திரவு போட்டு போராளிகளை விவசாயிகளை வெளியில் வரமுடியாத வழக்குகளை போட்டு சிறையிலடைப்பதும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகமட்டுமில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு செய்கிற துரோகமாகும்.

தமிழக விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு துனைபோவதை தமிழக அரசு கைவிட்டு மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்க்கு ஜெயலலிதா அவர்கள் வழியை பின் பற்றி தடை விதித்திட முன்வர வேண்டும்.

காவிரி நீரை பெறுவதற்க்கும், ராசி மணல், மேகதா து அனை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்,

காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டுக்குழு அமைத்திட அவர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள் வேண்டும்.

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

உயர் நீதிமன்றம் பெரிய விவசாயிகடன் ரத்து செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது திரும்ப பெற வேண்டும்.

நடை பெற உள்ள சட்டபேரவை கூட்டத்தொடரில் மேற்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சட்டபேரவையை அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி முற்றுகையிடுவோம்.

தொடர்ந்து தமிழக உரிமைகளை பறிப்பதற்க்கும், விவசாயிகளை அழிப்பதற்க்கும், ஒழிப்பதற்க்கு மான மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு ,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை போவதும், காவல் துறையை தூண்டி விட்டு ஒடுக்க நினைப்பதும். பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைப்பதும் தொடருவதும் கண்டிக்கதக்கது.
காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரம் பறிக்கப்படுவதற்க்கு சமமானது.

எனவே பெற்ற சுதந்திரம் பறிபோகும் போது அதற்கு கண்டனம் தெரிவித்திடும் விகையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை புறக்கணித்து. தங்கள் வீடுகளில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பினை தெரிவிப்போம்.

அனைத்து கட்சிகள், சேவை அமைப்புகள், பொதுமக்கள், சேவை அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள், மாணவர் கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் நல் ஆதரவு தர வேண்டுகிறோம்.

அன்புடன்...
பி.ஆர்.பாண்டியன்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது