Sunday, June 11, 2017

ரமலானில் அதிரை சிறுவர்கள் தற்கொலை முயற்சி?

 
ரமலான் மாதம் துவங்கியது முதலே சின்னஞ்சிறு சிட்டுக்களின் சாகச பயணங்கள் ஆரம்பமாகிவிட்டன. தற்போதைய நவீன கால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றோம் என்ற பேரில் அவர்களின் எதிர்காலத்தை அழிக்க முயல்கின்றனர். ஆம், மகன்கள் கேட்டதும் இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்த பெற்றோர்கள், அதே மகன்களுக்கு ஓட்டுநர் உரிமம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதனை நினைத்து பார்க்க மறந்துவிடுகின்றனர்

விளைவு, இரவு நேர பயணங்களில் முன்பைவிட அதிகரித்துவிட்ட சாலை விபத்துகள். மறுபக்கம் காவல்துறை அதிகாரிகளோ என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்துக்கொண்டு இருக்கிறார்கள். அதிரை இளைஞர்களின் இந்த இரவு நேர பயணங்கள் பல சமயங்களில் வேதாரணியம் வரையிலும் நீள்வதுண்டு. அவ்வாறான சூழலில் நிகழும் சாலை விபத்துகளால் ஏற்பட கூடிய கயங்களை வேறு காரணங்களை கூறி பெற்றோர்களிடம் மறைக்க முயல்கின்றனர் அல்லது பெற்றோர் அவைகளை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.

இந்த பதிவின் நோக்கம் சிறுவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க வேண்டாம் என கூறுவதற்காக எழுதப்பட்டது அல்ல, மாறாக தகுதியுடையோர்களுக்கு வாகனங்கள் வாங்கிகொடுத்தாலும் அவர்களை எப்போதும் பெற்றோர் என்ற முறையில் கண்கானிப்பு வளையத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவிப்பதற்கே ஆகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது