Wednesday, June 14, 2017

திமுக செயல் தலைவர் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிரை திமுகவினர் கைது

திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலைமரியலில் ஈடுபட்டார்
இதையடுத்து திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமரியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திமுகவினர் செயல் தலைவரின் கைதை கண்டித்து  பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த  போராட்டம் திமுக நகர செயலாளர் இராமகுணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நகர துணை செயலாளர் அன்சார்கான் அவர்கள் மற்றும் நகர அவைத்தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் ,கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் அவர்கள் மற்றும் ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமதுமற்றும் பல திமுக நிர்வாகிகளும் , தொண்டர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளை முற்றுகையிட்டு  மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அதிரை திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது