Thursday, June 1, 2017

அதிரை கரையூர் தெரு தீ விபத்து குறித்து திமுக ஒன்றிய முக்கிய தலைவர் திரு எஸ். எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் நேரில் பார்வை!

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஒருசில தினங்களுக்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பள்ளனது.

இதனால் அப்பகுதிமக்கள் பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்தனர்.
இதையடுத்து, அதிரை கரையூர் தெருவிற்கு திமுக ஒன்றிய முக்கிய தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆன திரு. எஸ். எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் இன்று சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

அதுமட்டுமின்றி ,இந்த விபத்தில் சிக்கி தங்களது உடைமைகளை இழந்த பொதுமக்களுக்கு நிவாரண, நிதி உதவி செய்தார்.

அதுமட்டுமின்றி, அப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் இலவசமாக வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் திமுகவை சேர்ந்த திரு.குணசேகரன், திரு. பழஞ்சூர் செல்வம், திரு.அன்சர்க்கான் , திரு. இப்ராஹிம், திரு.மரைக்க இதிரிஸ்(சிறுபான்மை ஓன்றிய அமைப்பாளர்), திரு.ஏனாதி பாலு, திரு.சரிப், திரு.AVM நூர் முஹம்மத் மற்றும்   பல திமுக உறுப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பல திமுக முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது