Saturday, June 3, 2017

குற்றாலம் போக நீங்க தயாரா? குற்றாலத்தில் சீசன் கலைகட்டுதாம்!


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து குற்றாலத்தில் சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது.

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இருப்பினும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

குற்றாலம் என்றாலே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சீசன் கலைகட்டத் தொடங்கும்.

குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய உடனே, குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். கடந்த 30ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. 

இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சீசன் வருவதற்கான தென்றல் காற்றும், வெயிலுடன் கூடிய சாரல் மழையும் அப்போதைக்கு அப்போது தலை காட்டிக் கொண்டே இருந்தது.

நேற்று இரவு முதலே குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அதிகளவில் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி இருக்கிறார்கள்.

இன்று காலை ஆரம்பித்தது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளார். குற்றாலத்தில் உள்ள 5 அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

குற்றாலத்தை பொருத்தவரை பாதுகாப்பு அம்சங்களுக்காக தனி ஆணையம் ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்திருந்தது. ஆனால் அந்த ஆணையத்துடைய பரிந்துரைகள் முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இவ்விடத்தில் மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது. 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது