ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு (அதிரை).அ.தி.மு.க முஸ்லீம்கள் ஆதரவு?

 

கடந்த முறை மத்தியில் ஆட்சி அமைத்த பா..கவினால் ஒரு ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளனை இந்திய நாட்டின் ஜனாதிபதியாக பதவியில் அமரவைக்க முடியவில்லை. அதனால் அவர்களின் அப்போதைய தேர்வாக அப்துல் கலாம் இருந்தார். இந்நிலையில் தற்போது மத்தியிலும் மாநிலங்களிலும் முன்பைவிட சற்று கூடுதல் பலத்துடன் இருக்கும் பா.. முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட தலித் சமூக தலைவர் என்ற ரீதியில் ராம்நாத் கோவிந்தை தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது.


பொதுவேட்பாளர் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி எதிர்கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தை முழுமை பெறுவதற்கு முன்பே ராம்நாத் கோவிந்த் அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் சிந்தனை ஓர்மித்த பாதையில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே இந்த அறிவிப்பு. ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ் இடக்கூடிய கட்டளைகளை அப்படியே துல்லியமாக செய்து முடிக்க கூடிய வல்லமைபெற்றவர். இவ்வாறு பின்னணி கொண்ட ஒருவரை பொதுவேட்பாளர் என்ற ரீதியில் ஆதரித்தால் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவை இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என்ற அச்சத்தினாலேயே எதிர்கட்சிகள் அதே தலித் சமூகத்தை சேர்ந்த மீராகுமாரை தங்கள் தரப்பு வேட்பாளராக அறிவித்துள்ளனர்.


இந்தநிலையில், தேசிய அளவில் மூன்றாம் பெரிய கட்சியான அதிமுகவின் மூன்று அணிகளுமே ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையை இந்தியா முழுவதும் எளிதில் நிறைவேற்ற அதிமுகவை சேர்ந்த மூன்று அணிகளும் பக்கபலமாக இருக்க போகிறது


இதற்கு மூன்று அணிகளை சேர்ந்த முஸ்லீம் தலைவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர்?


குறிப்பாக அதிரையில் இருக்க கூடிய முஸ்லீம் பெயர்கொண்ட தலைவர்கள் ஏன் இன்னும் வெளிப்படையாக தங்கள் கருத்தை சொல்ல தயங்குகின்றனர். பதவி பறிபோகிவிடும் என்ற பயமா? என அதிரைவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்


அதிரை .தி.மு. முஸ்லீம் நிர்வாகிகளின் கருத்துகள் விரைவில்...

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது