Tuesday, June 6, 2017

தஞ்சையில் உயிருக்கு போராடிய முதியவரை மீட்ட CBD அமைப்பினர்!


நேற்று (05-06-2017) தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேருந்து நிறுத்த நிழற்குடை  இருக்கையின் அடியில் 
கடந்த பத்து நாட்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி உடல் சதையை உயிர் தின்று, எலும்பும் தோலுமாய் குற்றியிரும் கொலையுயிருமாக கேட்பாரற்று கிடந்த முதியவரை கண்டதும் மனம் பதறிபோன CBD தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அதிரை காலித்அகமத் உடனடியாக தஞ்சை பகுதியிலுள்ள CBD (CRESCENT BLOOD DONORS)  உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் .

தகவலறிந்த CBD தஞ்சை உறுப்பினர்கள் விரைந்து வந்தனர்.

அந்த முதியவருக்கு அவசர உதவியாக மருத்துவ சிகிச்சை தேவை என்பதை உணர்ந்த CBD தஞ்சை உறுப்பினர்கள் உடனடியாக அவசர 108 ஊர்தியை (Ambulance) தொடர்புகொண்டு, வந்தடைந்த ஊர்தியில் முதியவரை பத்திரமாக ஏற்றி முதலுதவி அளிக்கபட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்த்தார்.

தற்பொழுது மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
முதியவரின் உடல்நிலை தேறிய பின் தஞ்சை CBD உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பாதை அமைப்பும் சேர்ந்து அம்முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்கவும் மற்ற தேவைகளை பூர்த்தி செய்யவும் முனைந்துள்ளார்கள் .

இந்த அளப்பறிய பணியை CBD உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பலரும் பாராட்டி வருகிறார்கள் இவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது