Saturday, June 17, 2017

சவூதி அரேபியாவில் இந்தியன் சோஷியல்ஃபோரம் ( I S F ) செய்த மனித நேயசேவை!

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சபீர் என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அல்ஹஸாவில் மரணமடைந்தார்.
இவரது மரணம் குறித்து போலீசாரின் விசாரணையில் தானாகவே தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளதாக தெரிய வந்தது.இவரது ஜனாசாவை கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.
மரணமடைந்த சபீரின் பெற்றோர்கள் கர்நாடகா மாநில SDPI கட்சி நிர்வாகிகளிடம் தனது மகனின் ஜனாசாவை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.
இந்த தகவல் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து முயற்சி செய்து வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு கடந்த 14.06.2017 அன்று சபீரின் ஜனாசா மைசூருக்கு அனுப்பப்பட்டது.
மைசூர் விமான நிலையத்தில் சபீரின் ஜனாசாவை பெற்றுக்கொண்ட கர்நாடகா மாநில SDPI நிர்வாகிகள் சபீரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது