Thursday, June 1, 2017

*அதிரை கரையூர் தெரு தீ விபத்து குறித்து நேற்று அதிமுக MLA S.V.சேகர் நேரில் ஆய்வு!*

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சரும் மாநிலவை உறுப்பினர் வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை MLA சேகர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ஆகியோர் இன்று பார்வையிட்டு பல நலத்திட்டங்கள் வழங்கினார்கள். இதில் அதிமுக மாவட்ட நிதியில் இருந்து ஒரு குடும்பத்திற்கு தல 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட், பேக் போன்றவைகளும் வாக்காளர் அட்டை போன்றவைகள் வழங்கப்பட்டு இறுதியாக அனைவருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது