10000 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று

சாதனை படைத்தார். ஆசிய தடகள போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இவர் ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஒட்டத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதே போட்டியில் இந்தியாவின் கோபி தொனக்கால் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் 11 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது