ஒன் டென்னில் வெளியாகுமா...அதிரைக்கு110KV துணை மின் நிலையம்?

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்பெருக்கம், மின் இயந்திர பயன்பாடு இவைகளின் காரனமாக அதிரை நகரில் தற்போதுள்ள 33KV துணை  மின் நிலையம் போதுமானதாக இல்லை.இதுகுறித்து நமதூர் மக்கள் மின்வாரிய உயரதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்தனர்.

இதன் பயனாக மாநில மின்வாரியம் அதிரைக்கு 110KV துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழு அதிரைக்கு விஜயம் செய்தது .

அவர்கள் நேராக அதிரை நகர திமுகவினரை சந்தித்து இடம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது,

இதனால் ஆத்திரமடைந்த அதிரை அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்ததாகவும் இதனால்    துணை  மின் நிலையம் வேறு ஊருக்கு மாற்றபட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில் தற்பொழுது நடைபெற்றுவரும் சட்டபேரவை கூட்டதொடரில் முதலமைச்சரின் 110வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார். இதில்  அதிரைக்கு வழங்க தவறிய 110KV துனைமின் நிலையம் அமைக்க முதல்வரின் அறிவிப்பு வெளியாகுமா? என்ற ஏக்கம் அதிரையர்களுக்கு இல்லாமல் இல்லை..
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது