தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் சார்பில் 29ஆம் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்..!தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குனர்  சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 18.06.2017 அன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள NGGO அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நீண்ட நாளைய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நடத்த வேண்டுமென்று என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 29.07.2017 சனிக்கிழமை அன்று வள்ளுவர் கோட்டம்,நுங்கம்பாக்கம் சென்னை 34ல் நடைபெறவுள்ளது.நாம் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் வென்றுறெடுக்கும் வரை எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நடவிருக்கும் குறுவட்ட ,மாவட்ட மற்றும் மண்டல போட்டிகளை கருப்பு பட்டை அணிவித்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது