300 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் ஜியோவின் அடுத்த அதிரடி இதோ!

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் தற்போது ஜியோ ஃபைபர் சேவையை வழங்க தயாராகி விட்டது. மேலும் இந்த சேவையில் இலவசங்களையும் வாரி இறைத்துள்ளது. ஜியோ ஃபைபர் பிரீவியூ திட்டத்தின் படி வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு 100 எம்பி வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
ஆனால் வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாலேஷன் கட்டணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். இந்த பணம் திரும்ப வழங்கப்படும் செக்யூரிட்டி டெபாசிட்டாகும். மாதம் 100 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீவியூ திட்டம் முடிந்தவுடனும் இலவசங்கள் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது