பள்ளிவாசல்களில் பாங்குசொல்வதால் ஒலி மாசு ! 6 -ஆம் வகுப்பு புத்தகத்தில!

ஐசிஎஸ்இ எனப்படும் இந்திய
மேல்நிலைக் கல்வி சான்றிதழ்
அமைப்பு சார்பில் 6ம் வகுப்பு
பாடப்புத்தகம்
வெளியிடப்பட்டுள்ளது. இதில்
ஒருங்கிணைந்த அறிவியல்
பாடப்புத்தகத்தில் ஒலி மாசு
குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒலி மாசு ஏற்படுத்தும்
புகைப்படம்
வெளியிடப்பட்டுள்ளது. அதில்
ரெயில், கார், விமானம் என்று
இந்த வரிசையில் மசூதியும்
இடம்பெற்றுள்ளது. 13வது
பாடத்தில் 202வது பக்கத்தில் இது
இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக
வளைதளங்களில் வைரலாகி
வருகிறது. பலர் இதற்கு
ஆத்திரத்துடன் கண்டனம்
தெரிவித்து வருகின்றனர்.
ஐசிஎஸ்இ வாரியம் பாடப்
புத்தகத்தில் இஸ்லாமிய விரோத
போக்கை கடைபிடிக்கிறது என்று
வாட்ஸ் அப்களில் கண்டனம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது