ஆலடி குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைப்பு!

அதிராம்பட்டினத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன அவற்றில், போக்குவரத்து மிகுந்த பகுதியாக வண்டிபேட்டை ஆலடி குளம் பகுதி திகழ்கிறது.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் மணல் லாரி ஒரு தடுப்பு சுவர் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. 

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை அடுத்து அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து இன்று முதல் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது, 

இது ஒருபுறம் இருக்க அப்பகுதியில் காத்து வாங்குவதற்கு என மாலை வேளைகளில் முதியவர்கள் ஏராளமானோர் பழைய தடுப்பு சுவற்றின் மீது உட்காருவது வாடிக்கை. அவர்களின் பாடுதான் தற்பொழுது திண்டாட்டமாக உள்ளது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது