ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: டிராபிக் ராமசாமி தகவல்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய்க் குழாயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளி யேற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்படும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்துக்கு சென்ற அவர், அங்கு கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தையும், கடைவீதியில் உள்ள எண்ணெய் கிணற்றையும் பார்வையிட்டார். பின்னர் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வயலின் உரிமையாளர் ராமிடம் விவரங் களைக் கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி கூறியதாவது: கதிராமங்கலம் கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளி யேற்றக் கோரி போராட்டம் நடத்து வது 99 சதவீதம் நியாய மானதே. இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் எவ்வித கருத்துகளை யும் கேட்காமலேயே எண்ணெய்க் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இத னால் வீடுகளில் வசிக்கும் மக்கள் கூட அச்சத்திலேயே உள்ளனர். அவர்களுக்கு ஓஎன்ஜிசி நிறு வனம் கூறியபடி இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை.
இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரி, கதிராமங்கலம் கிராம மக்கள் சார்பில் நானே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து வாதாட உள்ளேன்.
கதிராமங்கலத்தில் போராட் டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் உள்ளவர்களைப் பார்க்க குடும் பத்தினருக்குக்கூட அனுமதி தரவில்லை. எனவே, சிறையில் அனுமதியளிக்க மறுத்த போலீ ஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்துக்கு செல்வேன் என்றார்.
கடையடைப்பு
கதிராமங்கலம் மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, 8-வது நாளாக நேற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வேன், கார், ஆட்டோக்களும் இயங்கவில்லை.இதற்கிடை யில், கும்பகோணம் காந்தி பூங்கா முன் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது