கதிராமங்கலம் சென்றுஓ.என்.ஜி.சி நிறுவனதிற்குஎதிரான போராட்டத்தில்கலந்துகொண்டனர் அதிரை நாம் மனிதர்கட்சியினர்

கும்பகோணத்தை அடுத்த
கதிராமங்கலம் கிராமத்தில்
அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி
குழாய்களில் கடந்த 30ஆம் தேதி
கசிவு ஏற்பட்டது. இதையடுத்து
ஓஎன்ஜிசி பணிகளை
நிறுத்தக்கோரி கிராம மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். அப்போது எண்ணெய்
கசிவு ஏற்பட்ட இடத்தில் சிலர் தீ
வைத்தனர். இதையடுத்து கிராம
மக்கள் மீது போலீசார் தடியடி
நடத்தினர். பதிலுக்கு கிராம
மக்களும் கற்களை வீசித் தாக்குதல்
நடத்தினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம்
மாநிலம் முழுவதும்
பூதாகரமாக வெடித்ததை
அடுத்து பலர் நேரில் சென்று
கிராம மக்களுக்கு ஆதரவு
தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று
அதிரையை சேர்ந்த நாம் மனிதர்
கட்சியினர் கதிராமங்கலம் சென்று
ஓ.என்.ஜி.சி நிறுவனதிற்கு
எதிரான போராட்டத்தில்
கலந்துகொண்டனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது