பள்ளி குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க புதிய திட்டம்......அடுத்த கல்வியாண்டு முதல் நாடுமுழுவதும் அமல்

பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், ஜவாத் நகரில் நேற்று 20 உயர்தொழில் நுட்ப பள்ளிகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது-
நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், மாணவ, மாணவர்களின் புத்தக சமையை அடுத்த ஆண்டுமுதல் குறைக்கப்படும். பள்ளிக்கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், புத்தகச்சுமை குறையும்.
ஆதலால், நாடுமுழுவதும் இருக்கும் பள்ளிகளை தரம் உயர்த்தி, டிஜிட்டல் போர்டுகளும், மென்பொருளுடன் கூடிய புரஜெக்டர்களும் வழங்கப்படும்.
இது அடுத்த கல்வி ஆண்டுமுதல் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். இந்தபுதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் புரொஜெக்டர் மூலம் பாடம் எடுக்கும் முறை கற்க பயிற்சி அளிக்கப்படும்.
நாட்டில் 70 ஆசிரியர்களும், 26 கோடி மாணவர்களும், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளும் இருக்கின்றன. 10 கோடிமாணவர்கள் மதிய உணவு திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது