தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் புத்தகத்திருவிழா நாளை தொடக்கம்..!

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

இதை முன்னிட்டு அரங்குகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார்.
 இத்திருவிழாவில் நாள்தோறும் பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம் கிடையாது.

இத்திருவிழாவில் 103 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 74 புத்தகப் பதிப்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
பல்வேறு முதன்மையான பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன.
இந்த அரிய வாய்ப்பை மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி புதிய நூல்களை வாங்கிச் செல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைவதற்கு இத்திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது