யார் இந்த அதிரை இனாமுல் ஹசன்?அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாபிழ் உதுமானின் மகனான இனாமுல் ஹசன், பாட்சா மரைக்காயரின் பேரன். புதுக்கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பள்ளி பருவமுதலே மாணவர்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தின் தன்னெழுச்சி என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் முன் நின்று குரல் கொடுத்தார்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தியுள்ளார். இவர் கல்லூரி மாணவர்களின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தது முதலே சமூக வலைதளங்களில் இனாமுல் ஹசனுக்கு ஆதரவாக மீம்ஸ்கள் பகிரப்பட்டன

இதனையடுத்து தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் 80% வாக்குகள் விதியாசத்தில் வெற்றிபெற்று புதுக்கல்லூரியின் மாலை நேர வகுப்பு மாணவர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதிரையர் ஒருவர் புதுக்கல்லூரி மாணவர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது