தஞ்சை உள்ளிட்டபகுதிகளில் வக்பு நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை : அமைச்சர் தகவல்.

வக்பு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையாளர்களை கொண்டு குழு அமைக்கபட்டு உள்ளதாக தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான வக்பு நிலங்கள் அரசியல்வாதிகளாலும், தனியாரினாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பல்வேறு புகார்கள் தமிழக வக்பு வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்  இன்று வருவாய்துறை அமைச்சரின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் தமிழக வக்பு நிலங்களை மீட்க மாவட்ட வாரியாக ஆணையாளர்களை கொண்ட குழு அமைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் முடிக்கபட்டுவிட்டன என்றும் அதற்கான நடவடிக்கைகளில் விரைவில் மீட்பு நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது