எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று முதல் இந்த கட்டணங்கள் எல்லாம் குறையும்!இன்று முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இணையதளப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் 75 சதவீதம் வரை குறைய இருக்கின்றது.
என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் இரண்டும் இணையதளம் மூலம் செய்யக்கூடிய மின்னணு பரிவர்த்தனை முறையாகும். இந்தச் சேவைகளினை பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை எளிதாக அனுப்ப முடியும்.

கட்டணம் குறைப்பிற்கு என்ன காரணம்?

டிஜிட்டல் பரிவர்த்தனையினைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பரிவர்த்தனை சேவைகளுக்கான கட்டணத்தைக் குறைத்துள்ளது.

10,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனை:

முன்பு என்ஈஎப்டி-ல் எஸ்பிஐ வங்கி என்ஈஎப்டி பரிவர்த்தனை செய்யும் போது 10,000 ரூபாய் வரை 2 ரூபாய் வசூலித்து வந்தது அது இப்போது 1 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கிளையில் இருந்து செய்தால் 2.50 ரூபாய் உடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை:

இதுவே என்ஈஎப்டி-ல் 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு வசூலித்த வந்த 4 ரூபாயினை 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி ஆகக் குறைத்துள்ளது. வங்கி கிளையில் இருந்து செய்தால் 5 ரூபாய் உடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை:

என்ஈஎப்டி-ல் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 12 ரூபாயாக இருந்த கட்டணம் 3 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே வங்கி கிளைகளில் செய்தால் 15 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

2 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனை:

என்ஈஎப்டி-ல் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையினைப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் 20 ரூபாய்க் கட்டமாக வசூலித்து வந்தது 5 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே வங்கி கிளையில் என்றால் 25 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணமாகும்

2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான பணப் பரிவர்த்தனை:

ஆர்டிஜிஎஸ் பணப் பரிவர்த்தனை சேவையின் வாயிலாக 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்தால் முன்பு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அது இப்போது 5 ரூபாய் கட்டணத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

5 லட்சத்திகும் கூடுதலான பணப் பரிவர்த்தனை:

ஆர்டிஜிஎஸ் பணப் பரிவர்த்தனையின் கீழ் 5 லட்சத்திற்கும் கூடுதலாகப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 40 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவே இப்போது 10 ரூபாய் உடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


By oneindiatamil
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது