உங்கள் சொந்தக்குரலில் தகவல் சொல்லலாம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இத்தளம் அதிராம்பட்டினம் மக்களின் பொதுவான தகவல் பரிமாற்றக் களமாக தாய் மொழியாம் தமிழில் இயங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளனர். நமதூரில் நடக்கும் அன்றாடச் செய்திகளை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினாலும் அதற்கான வழிமுறைகள் செலவு மிகுந்தவை.

வசதியுள்ளவர்களுக்கோ இணைய நுட்பங்கள் அறியாத காரணத்தினால் தாங்கள் அறிந்த செய்திகளை சுற்றியுள்ளவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வதோடு மறந்து விடுகின்றனர். ஈமெயில் வசதியுள்ளவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ செய்திகளை இலகுவாக தட்டச்சு செய்து அனுப்பி விடுகின்றனர். இது ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும், கேள்விப்பட்ட செய்தியை பிறருக்குத் தெரிவிக்கும் போது நம்முடைய எழுத்துத் திறனை பிறர் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களே என்று அமைதியாக இருந்து விடுகின்றனர் அல்லது கேள்விப்படும் செய்திகள் வெவ்வேறு விதமாகச் சொல்லப்படுவதால் தேவையற்ற குழப்பங்களும் புரளியும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய சிரமங்களைக் கருத்தில் கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இத்தளம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. இதன்மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளை உங்கள் சொந்தக் குரலிலேயே இரண்டு நிமிட ஒலிப் பதிவாகச் சொல்ல முடியும். இத்தளத்தில் காணும் அனைத்து செய்திகளுக்கும் உங்கள் கருத்துக்களை கிழே  உள்ள செய்திப் பெட்டியில் உங்கள் கருத்துக்கள்,வாழ்த்துக்கள் மற்றும் தகவல்களை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு செய்தித்தளம் அதுவும் நாளிதழ்கள்,ஊடகங்களில் கிடைக்காத உள்ளூர் செய்திகளைச் சொல்லும் தளம் என்பது ஒருசிலரால் மட்டும் சாத்தியப்படாது. வருகைதரும் அனைவரும்
முடிந்தவரையில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் உற்சாகமாகவும் பயனுள்ள வகையிலும் தடையற்றக் கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியும்.

உண்மையைச் சொல்ல தயங்குவது பொய் சொல்வதற்குச் சமம்! ஆகவே உள்ளதை உள்ளபடி சொல்லத் தயங்க வேண்டாம்.

சொல்வீராக!!
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது