கூட்டு குடும்பம் மனச்சோர்வைக் குறைக்கும்...!


Image result for undivided family

தனித்து அல்லது கணவன், மனைவி அவர்களுடைய குழந்தைகள் என்று மட்டும் சிறு குடும்பமாக வாழ்வதை விட கூட்டு குடும்ப வாழ்க்கை முறை சிறந்தது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கூட்டு குடும்பமாக அல்லது மிகப் பெரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்களுடன் சேர்ந்து, கலந்து பழகி வாழ்வதால் மனப்பதற்றம் குறைகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. இடைவிடாத மனா அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்கு பொருந்தக்கூடிய இந்த முடிவை, எலிகளை வைத்து சோதனை நடத்தி கண்டுபிடுத்திருக்கின்றனர்.

பெங்களுருவில் உள்ள "நிம்ஹான்ஸ்" மருத்துவமனையுடன் இணைந்த ஆய்வுப் பிரிவு இந்த சோதனையை நடத்தியது.

பிறந்து எட்டு வாரங்கள் ஆன ஆண் எலிகள் நான்கு தனித்தனி குழுக்களாக முதலில் பிரிக்கப்பட்டன. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலிகள் குழுவுக்கு தொடர்ந்து 21 நாட்களுக்கு வெவ்வேறு வகையில் மனா அழுத்த பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு, அவை எப்படி எதிர் வினையாற்றுகின்றன என்று கூர்ந்து கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அடுத்த 10 நாட்களுக்கு, முன்பு அடைத்து வைத்த கூண்டைவிட பெரிய கூண்டுக்கு அவை மாற்றப்பட்டன. அங்கு இதர பத்து அல்லது பன்னிரண்டு எலிகளுடன் கலந்து பழக வாய்ப்பு தரப்பட்டது. அங்கே எலிகள் விளையாட அவற்றுக்கேற்ற சிறு பொம்மைகளும் வைக்கப்பட்டன.

ஏணி மீது ஏறுவது, குழாய் பாதையை கைகளால் சுற்றுவது போன்ற விளையாட்டுகள் தனியாகவே தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்த எலிகளும் பெரிய கூண்டில் பிற எலிகளுடன் வாழ்ந்த எலிகளும் இந்த ஆய்வில் சேர்த்து வைக்கப்பட்டன.

நல்ல சூழலில் வளர்ந்த எலிகளுக்கு நினைவாற்றல் தொடர்பான பிரச்சினைகள் தென்படவில்லை.
பெரிய கூண்டில் பல எலிகளுடன் வாழ்ந்த எலிகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் வலுவாகவே இருந்தன. 

மனிதர்கள் வேலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக தனித்து இயங்க விரும்புவதால் அண்ணன், தம்பிகளே பெற்றோரையும் விட்டு பிரிந்து தனித்தனி குடும்பங்களாக வாழ்கின்றனர். அவர்களிடத்தில் மனா பதற்றமும் சோர்வும் அதிக நேரம் காணப்படுகிறது. மனிதர்களும் கூட்டு குடும்பமாகவோ சமுகமாகவோ சேர்ந்து வாழ்வதன் மூலமோ மனப் பதற்றங்களை குறைத்து கொள்ளலாம். மனச்சோர்வை விரட்டலாம்.
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடியுங்கள் என்ற இறை வசனம் சமுதாயத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் அவசியம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நம் மார்க்கம் எடுத்துரைத்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

கருத்து.
அதிரை. வா. இபுறாஹிம்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது