அதிரை கூட்டு குடி நீர் குழாயில் சோதனை முறையில் நீர் பாய்ச்சல்!

மாறிவரும் பருவநிலை மாற்றம், மக்கள் பெருக்கம் இவைகளின் காரனமாக அதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் குடி நீர் தட்டுபாடு நிழவி வந்தன. 

இதனை அடுத்து பொதுமக்களின் தேவையை அறிந்து கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தை செயல் படுத்த மாநில அரசு ஒப்புதல் வழங்கியது 

இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டனர். இதில் CMPலைன் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி குழாய்கள் பதிக்கபட்டுள்ளன. 

இந்நிலையில் பதிக்கப்பட்ட குழாய் வழியே தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகின்றன, 

அதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக குழாய் வழியே உள்ள அழுக்கு மணல்களை அகற்ற நீர்பாய்ச்சபட்டு வருகின்றன.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது