வீட்டு பணியாட்களிடம் பரஸ்பரம் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளாதீர்... அதிர்ச்சி தரும் தகவல் !


முத்துபேட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமுத்து,( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதிரை தரகர் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2000ஆமாவது ஆண்டு நாகூரில் திருமணம் நடைபெற்றது,  

வாழ்க்கை சுமூகமாக நகர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் கனவருக்கு தகாத நண்பர்களின் நட்புக்களால்  சில ஆண்டுகளுக்கு முன்னர் குடிபழக்கம் எற்பட்டதாகவும் இதனால் ஃபாத்திமுத்து அன்றாட சிலவுக்கு கூட சிரமப்பட்டதாகவும் ... இதனை அடுத்து  பாத்திமா சக தோழிகள் மூலம் முக்கிய தெருவில் வீட்டு வேலைப்பார்த்து வயிற்றை கழுவி வந்துள்ளார்.

இதனிடையே தினமும் போதை கனவானால் ஒரு குறிப்பிட்ட தெருவின் பெயரை கூறி அந்த தெருவில் உள்ள பெண்களின் நம்பரை வாங்கி வாடி என அடித்து துன்புறுத்தியதாகவும், இதன் தொடர்ச்சியாக அவ்வபொழுது பலத்த அடி வாங்கியும் உள்ளார் பாத்திமா. 

இதன் உச்சபட்சமாக ஆத்திரமடைந்த அந்த போதை ஆஷாமி (கணவன்) பாத்திமாவின் கையை உடைத்து தொங்கவிட்டுள்ளார்.  

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான அவள் கனவனே வேண்டாம் என உதறிவிட்டு வேலை பார்த்த இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில்... 

தனது கனவருக்கு நான் இரண்டாவது மனைவிங்க..., அவனின் முதல் மனைவிவிட்டு வேலை செய்பவள்தான் அவள் இது போன்ற கிழ்த்தரமான செயலை செய்துள்ளாள், அதே போன்று என்னையும் நினைத்து கூ***டி கொடுக்கும் வேலையை செய்ய சொல்கிறார்.

எனது உசுரே போனாலும் நான் இது போன்ற கீழ்தரமான வேலைகளை செய்ய துனிய்மாட்டேன்... என்றும் அவரிடம் இருந்து என்னை விடுவித்து விடுங்கள் என கண்ணீர் வடிக்கிறார்... ஃபாத்திமா...

அதிரைபுதியவன்....


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது