தஞ்சை (வ) மாவட்டம் சக்கராப்பள்ளியில் தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டனர் தமுமுக - மமக நிர்வாகிகள்...
மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை  I.M. பாதுஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சக்கராப்பள்ளி நிர்வாகிகளுடன் கள ஆய்வு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்ப்பாடு...

நேற்று தஞ்சை (வ) மாவட்டம் சக்கராப்பள்ளியில் தீ விபத்து  ஏற்ப்பட்டு 63 வீடுகள் எறிந்து நாசமாகின உடுத்திய உடைகளோடு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்து கைகுழந்தைகள் உள்பட அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்க பட்டுள்ளனர். செய்தி அறிந்த தமுமுக - மமக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்தனர். அதை தொடர்ந்து இன்று மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை  I.M. பாதுஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பா , சலீம் , பாபுஜி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முபாரக், தஞ்சை (தெ) மாவட்ட நிர்வாகிகள் ரியாஸ் அகமது, அப்துல் ஜப்பார், லுக்மன் ஹக்கீம் மற்றும் கிளை நிர்வாகிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு ஆறுதல் கூறி சக்கராப்பள்ளி பெரிய ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து நிலவரங்களை தெறிந்து கொண்டு நிவாரண பொருள்கள் விரைவில் தமுமுக சார்பாக வந்தடையும் என்றும் இந்த விபத்து சம்பந்தமான அனைத்து பணிகளுக்கும் தமுமுக என்னேரமும் ஜமாத்தோடு சேர்ந்து செயல்படும் என்றும் உறுதி அளித்தனர்..

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது