மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த "சாம்சங்" நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...


Image result for class room imagesதமிழக அரசு மாநகராட்சி பள்ளிகளின் வகுப்பறை உட்கட்டமைப்பை மேம்படுத்த சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும். உலகத்தரத்திற்கு சமமாக நமது கல்வி மேம்படும். புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வல்லரசு நாடுகளுக்கு இணையான அறிவியல் மற்றும் கல்வி கலாச்சாரம் பெருகும். நம் நாட்டின் வளர்ச்சி, தற்போதைய இளைய சமுதாயத்தினரின் கல்வி வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பெற்றோர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களின் மீதுள்ள கண்மூடித்தனமான ஆர்வம், குறைந்து அரசு பள்ளிகளின் மீது திரும்பும். இதன் மூலம் அனைத்து வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் கல்வி சென்றடையும் என்பதில் ஐயமில்லை,

கருத்து.
வா. இபுறாஹிம். அதிரை.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது