பட்டுக்கோட்டையில் ஹெல்மேட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்..!

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்.  காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையினை பட்டுக்கோட்டை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்டனர்.  ஆய்வின் போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்துகள் கூறி கையொப்பம் இட்ட திருக்குறள் புத்கத்தினை ஆய்வாளர் அன்பழகன் வழங்கினார்.  தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை பகுதியில் பதிவு செய்யப்படாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள், பிரஸ் என்றும் காவல் என்றும் ஸ்டிக்கர் ஒட்டிய போலியான நபர்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்தை தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதித்து ரசீதும் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த நபர்களுக்கு காவல்துறையினர் புத்தகம் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது