அதிரை அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சியை சார்ந்த ஆதம் நகரில் மோட்டார்கள் பறிமுதல்..!

                அதிரை அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த ஆதம் நகர் பகுதியில் நேற்று குடி நீர் மோட்டார்களை கழட்டசொல்லி அறிவித்த நிலையில் இன்று(28/07/2017) காலை சுமார்11மணிமுதல் வீடுகளில் உள்ள மோட்டார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து அப்பகுதியில் சுமார் 18 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் அப்பகுதி மக்கள் கூறுகையில்:
               ஆதம் நகர் பகுதியில் சுமார் 7 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று இரு தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அன்று பேச்சுவார்த்தை மூலம் அப்போராட்டம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து தண்ணீர்ரும் இன்று வரை வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி கடலுக்கு அருகில் உள்ளதால் நிலத்தடி நீர் முழுவதும் உப்பு தண்ணீராக வருவதாகவும் , அந்த தண்ணிரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மோட்டார் வழியாக வரும் தண்ணிரை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.இந்நிலையில் மோட்டார்களை கழற்றினாள் நாங்கள் தண்ணீருக்கு எங்கு போவது என்ற நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டபோது அப்பகுதி மக்களும் போலீசாரை தடுத்து நிறுத்தினார். இதை தொடர்ந்து அங்கு முக்கிய அலுவளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நாளை மாலைக்குல் அனைத்து மோட்டார்களையும் கழட்ட வேண்டும் என்று கூறிவிட்டு மறுபடியும் பார்வையிட வருகை தருவோம் என்று கூறி விட்டு சென்றனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது