ஜனாதிபதி தேர்தலில் மொபைல் போனுக்கு தடை


ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் எடுத்துச் செல்ல, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: ஜனாதிபதி தேர்தல், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு, மொபைல் போன் மற்றும் புகைப்படக் கருவி எடுத்துச் செல்லக் கூடாது
 ஓட்டளிக்கச் செல்லும் போது, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்
 ஓட்டுச்சீட்டில், 'ரைட்' மற்றும், 'பெருக்கல்' குறியீடுகளை பயன்படுத்தினால், ஓட்டுச்சீட்டு செல்லாததாகி விடும்
 தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளர் பெயருக்கு எதிராக உள்ள, விருப்ப வரிசை முறை கட்டத்தில், '1' என்ற எண்ணை குறிப்பிட வேண்டும்
 ஓட்டுச்சீட்டில், தங்கள் பெயரை எழுதுவதோ, கையொப்பமிடுவதோ அல்லது வேறு ஏதேனும் சொற்கள் எழுதுவதோ கூடாது
 ஓட்டுச்சீட்டை உருக்குலைக்கக் கூடாது
 முதலில் வழங்கப்பட்ட ஓட்டுச்சீட்டு கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ, வேறு புதிய ஓட்டுச்சீட்டு வழங்கப்படாது
 ஓட்டுச்சீட்டை, ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தை விட்டு, வெளியே எடுத்துச் செல்லக்கூடாது
 அமைதியையும், கண்ணியத்தையும் காக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திலும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது