தமிழக செஸ் வீரர்களுக்கான சிறப்பு போட்டிகள்....
தமிழகம் முழுவதும் சதுரங்க விளையாட்டு வீரர்களுக்காக சிறப்புப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
'http://www.easypaychess.com' என்ற அந்த இணையத்தளத்தில் தமிழகம் முழுக்க உள்ள செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் பதிவு செய்து அதற்கென உள்ள கட்டணத்தையும் செலுத்தி, போட்டிகளில் பங்கேற்கலாம்.

இது குறித்து, போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், " செஸ் போட்டிகளில் பங்கேற்போருக்கு பதிவுக் கட்டணம் ரூ.150 முதல் ரூ.3000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் அதிகரிக்க அதிகரிக்க, பரிசுத் தொகையும் ரூ. 22 ஆயிரம் முதல், ரூ. 6 லட்சம் வரையில் அதிகமாக கிடைக்கும்.

செஸ் விளையாட்டுப் போட்டிகள் பெரியவர்களுக்கு மட்டும்தான் நடத்தப்படும் என்றில்லை. பள்ளி மாணவர்களுக்கும் வயது அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான செஸ் போட்டிகள் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் அதிகம் நடைபெறும். அதில் ஒரு போட்டியாக சென்னை பம்மலில் தட்சிணாமூர்த்தி நினைவு செஸ் போட்டிகள் இந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப்போட்டி நடைபெறும் முகவரி:
செஸ் போட்டிகள் 2017, மாஸ்டர் மைண்ட் அகாதெமி, ஸ்ரீ கணேஷ் திருமண மண்டபம், பொழிச்சலூர் மெய்யின் ரோடு, பம்மல், சென்னை.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.2 லட்சம். TNSCAல் பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பதிவு செய்த விண்ணப்ப படிவம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்தனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது