பட்டுக்கோட்டையில் பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாபட்டுக்கோட்டையில் தமிழ் மாநில அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்று இறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு  தமிழர் அறம் அமைப்பு சார்பில் 3-ம் ஆண்டு நிதியளிப்பு, பாராட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழர் அறம் அமைப்பின் நிறுவனர் தலைவர் சி. ராமசாமி தலைமை வகித்தார். விழாவில், தமிழ்நாடு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் பங்கேற்று அரசுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவிகள் அதிரை என். சுப்புலெட்சுமிக்கு ரூ. 4,000,  தளிகைவிடுதி எம். கோபிகாவுக்கு ரூ. 3,000 நிதி வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து,  நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் நிலை குறித்தும் அவர் விளக்கினார்.


அடுத்து,   மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் துணை இயக்குநரும், முன்னாள் பேராசிரியருமான க.  ராமசாமி  12-ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் என். பர்ஹானா பாத்திமா, செ. சங்கீதா, எச். தமீமா ஆகியோருக்கு முறையே ரூ. 5,000, ரூ.4,000, ரூ.3,000 நிதி வழங்கி பாராட்டினார்.


சென்னை மற்றும்  பட்டுக்கோட்டை தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு முனைவர் மறை. தாயுமானவன்,  தென்மொழி இதழாசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் ஆகியோர் தலா  ரூ.5,000 நன்கொடையை நெறியாளர்கள் சிவ. செந்தமிழ்வாணன்,  மு. நடராசன் ஆகியோரிடம் வழங்கினர்.
இதைப் போல, இசைப்பாவலர் நா. நந்தன், தமிழ்வழிக்கல்வி இயக்கச் செயல்பாட்டாளர் அ.சி. சின்னப்பத்தமிழர் ஆகியோருக்கு தலா ரூ. 1,000 நிதியை  முனைவர் மா. பூங்குன்றன் வழங்கினார்.

விழாவில் தமிழர் அறம் அமைப்பு சார்பில் மொத்தம் ரூ. 31,000 நிதி வழங்கப்பட்டது.  வழக்குரைஞர்  சு. செந்தமிழ்செல்வன் வரவேற்றார்.  மு.  நடராசன் நன்றி கூறினார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது