இக்ரா இஸ்லாமிக் பள்ளியில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இக்ரா இஸ்லாமிக் மற்றும் மக்தப் இரண்டாம் ஆண்டு துவங்கியுள்ளது.இந்நிலையில் நோன்பு பெருநாள் முன்னிட்டு மாணவர்களுக்கு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளி நடத்தியது.இந்நிகழ்வு நேற்று(08/07/2017) இக்ரா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பாக இனிப்புகள் மற்றும் படிக்க எழுத உதவும் பொருட்கள் வழங்கினார்கள்.இது போன்ற பல நிகழ்ச்சிகள் அப்பள்ளி நடத்திக்கொண்டு வருகின்றனர்.மாணவர்களை ஊக்கவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்தப்பள்ளி ஆரம்பம் ஆகி ஒருவருட காலம் முடிவுபெற்றது. தற்பொழுது இந்த ஆண்டிற்கான பாட திட்டம் நடைபெற்று வருகிறது.

இதுமட்டும் இன்றி பல புதுமையான நிகழ்வுகளை இப்பள்ளி நடத்தி மாணவர்களை ஊக்கவித்து வருகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது