அதிகப்படியான மின் தடையால்..வங்கிப்பணி மற்றும் ஏ டி எம் சேவைகள் பாதிப்புImage result for bank servicesஅதிரை நகரில் ஏற்படும் தொடர்ச்சியான மின் தடையால் அனைத்து வங்கிகளின் ஏ டி எம் சேவைகள் பாதிப்பதுடன், மக்களின் இன்றியமையாத தேவைகளுக்கு வங்கிகள் சேவையில் தொய்வடைந்துள்ளது. அடித்தட்டு மக்களிலிருந்து அனைத்து மக்களும் தங்களின் இன்றியமையாத தேவைகளுக்கும் வங்கிகளை நம்பியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வங்கிகள், தனது வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த வங்கிகளின் மேலாளர்கள் இவற்றை மனதில் கொண்டு, தத்தமது சேவையை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வழங்குவதை உறுதி செய்யவும், வங்கி சேவையில் எதிர் கொள்ளும் பல வித இடர்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி கூறியதை போன்று இந்திய நாட்டின் ஒவ்வொரு குடி மகனும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு, வங்கி கணக்கை வைத்திருக்கும் அனைவரும் எளிதாக வங்கி சேவையை பெறவேண்டும் என்பதை விளங்கி செயல்பட வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

அதிரை வாவன்னா இப்ராஹிம்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது