தஞ்சையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்..!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. 

அதேபோல், தஞ்சாவூரிலும் மருத்துவர்கள் தினம்(01/07/2017)அன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. 

இந்த முகமை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பொறுப்பு டாக்டர் அவர்கள் துவங்கிவைத்தார்.

 இந்த நிகழ்வில் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் திரு.ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். 


இம்முகாமில் இந்திய அரசு டாக்டர்கள் மாவட்ட தலைவர் டாக்டர் திரு.அன்பழகன், டாக்டர்.வினோத், டாக்டர். மோகன் ராஜ் , டாக்டர்.ஹாஜா முஹைதீன்(அதிரை) மற்றும்        அலுவலக மருத்துவர் டாக்டர். நாகராஜன் போன்றவர்கள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது