அதிரை CMP லைன் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் அகற்றம்.!!
                 மின் கம்பம் அகற்றம்.

சி.எம்.பி லைன் ஹனீப் பள்ளிக்கு எதிரில் உள்ள சந்தில் வாகன போக்கு வரத்துக்கு இடையூராக இருந்து வந்த மின் கம்பம்

இரவு நேரத்தில் பவர் கட்டான போது இருட்டில் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அக்கம்பத்தில் மோதி காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

இக் கம்பத்தை அகற்றச் சொல்லி பல ஆண்டு காலமாக சமூக ஆர்வலர்களால் சம்பந்தப் பட அதிகாரிகளுக்கு  மனுக்கள் கொடுத்தும் அலட்சியம் காட்டப்பட்டது.

இனியும் காலம் தாழ்த்துவதால் குதிரை கொம்பாக ஆகிவிடும் என்று கருத்தில் கொண்டு.

சமூக ஆர்வலரால் சென்னை மாநகரில் உள்ள சம்பத்தப் பட்ட அதிகாரியின் கவணத்திற்க்கு கொண்டு சென்று அவர்களின் உத்தரவின் பேரில்.22/7/2017 அன்று இடையூராக இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டது.

இதற்க்காக அயராது முயற்ச்சி செய்து தக்க நடவடிக்க எடுக்க உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது