SDPI முப்பெரும் விழா நேரலை.

Monday, July 3, 2017

ONGC கிணறுக்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் உறுதி..!

கதிராமங்களம் பேரழிவை ஏற்ப்படுத்தும்ONGC கிணறுக்கு தடை விதிக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உறுதி என
பி.ஆர்.பாண்டியன்
தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்களம் கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமல், மக்கள் கருத்தறியாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் வகையில் பேரழிவை ஏற்படுத்தும் ONGC யின் கச்சா, இயற்க்கை எரிவாயு எடுக்கும் பணிக்கு தடை விதித்திட வேண்டும்,

விளை நிலங்களில் அனுமதியில்லாமல் குழாய் பதித்து எடுத்து செல்லப்படும் கச்சா எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டு விளை நிலங்கள் பாழடிக்கப்படுவதை தடுத்து விளை நிலங்களை பாதுகாத்திடவும் | பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களை சீரமைத்து சாகுபடிக்கு கொண்டு வந்திடவும் நடவடிக்கை எடுத்திட தஞ்சை .மாவட்டஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுருத்தி உள்ளோம்.

மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எடுத்துரைத்தோம்.மேலும் சட்டத்திற்க்கு புறம்பாக செயல்படும் ONGC க்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதோடு,

கதிராமங்கலம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் , விவசாயிகள் பொதுமக்கள் பங்குகொள்ளம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த உடன் நடவடிக்கைகளமேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

2001ல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற தேவையில்லை என்று ON GC தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். அது உண்மையில்லை உச்சநீதிமன்றம் பாதிப்புகள் குறித்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுமக்கள் ஒப்புதல் பெற்று தான் கிணறுகள் அமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது அதனடிப்படையில் தடை விதிக்க வேண்டும் என்றோம். அதனை ஏற்று தடை விதித்திட உறுதி அளித்தார். இவ்வாறு பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் த.புண்ணியமூர்த்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் பாலன், உன்கிட்டோர் பங்கேற்றனர்.

இவன் : என்.மணிமாறன்.
செய்தி தொடர்பாளர்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது