ஆக.,22-ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 15ம் தேதி டில்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது