22அம்ச திட்டங்களுடன் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக சமூக ஆர்வலர் ஜியாவுதீன் தெரிவித்துள்ளார்!அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் பாரம்பரியமிக்க பெரிய முஹல்லாவை கொண்டதாகும். இந்த சங்கத்தில் நம் முன் சென்ற முன்னோர்கள் செம்மையான முறையில் வழிநடத்தி விட்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் இந்த சங்கத்தின் தற்போதய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவு பெற உள்ள நிலையில் சங்க நிர்வாகம் ஜனநாயக அடிப்டையில் தேர்தலை நடத்த சங்க நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தலைவர்,செயலர், பொருளர் பதவிகளுக்கு நேரடி உறுப்பினர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். 

இதற்காக பூர்வாங்க பணிகள் முடுக்கிவிடட்டுள்ள நிலையில், சங்கத்தின் செயலாளர் பதவிக்கு ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஜியாவுதீன்  போட்டியிட இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். 

இது குறித்து பேசிய ஜியாவுதீன் 22 திட்டங்களை வரைவு செய்துள்ளதாகவும் , தாம் வெற்றி பெரும்பட்சத்தில் முஹல்லாக்கள் ஒற்றுமைக்கான முயற்ச்சியை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது