உ.பி.யில் மேலும் ஒரு ரயில் விபத்து:100 பேர் படுகாயம்..!


லக்னோ :  உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் இருந்து டெல்லிக்கு செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 2 .50 மணி அளவில் அலிகர் அருகே ஆரையா எனுமிடத்தில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை, மீட்புப் பணிக்கு டெல்லியிருந்து ஒரு மருத்துவ ரயில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன், உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தது இந்நிலையில்,மீண்டும் ஒரு ரயில் விபத்து அதே மாநிலத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது