சென்னையின் பல இடங்களில் இடியுடன் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி!பெரும்பாலான இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம், ராமாபுரம், கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டி வருகிறது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக விட்டு விட்டு இடியுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மழைக் காரணமாக வளசராவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல இடங்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
திடீர் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்துள்ளனர். இருப்பினும் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்தித்ருந்த மக்கள் இந்த மழையை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, செவிலிமேடு, ஒரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, செவிலிமேடு, ஒரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது