பட்டுக்கோட்டையில் சாதனையுடன் முடிவுபெற்றது விதை பந்து திருவிழா..!            தமிழகம் முழுவதும் பல இடங்களில் மரம் வளர்க்க புதியதோர் முயற்சியாக விதை பந்துகளை தயாரித்து ஏரிகள், குளங்கள் மற்றும் தரிசு நிலங்களில் தூவி தமிழகத்தை பசுமையாக மாற்றி வருகின்றனர்.

அதே போல் பட்டுகோட்டை 12ஆம் தேதி காலை 8மணிமுதல் 14ஆம் தேதி காலை 8 மணிவரை சுமார் 48மணிநேர உழைப்பால் 11,11,111 விதை பந்துகள் செய்து சாதனை படைக்க பட்டுகோட்டை விதைகள் அமைப்பு சார்பில் முடிவுசெய்யப்பட்டது.
அதே போல் இந்த நிகழ்ச்சி பட்டுகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ஆம் தேதி காலை8மணிமுதல் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மழை, வெயில் பாராமல் நடைபெற்றது.
இதில் 11லட்சத்திற்கும் மேலான விதை பந்துகள் தயார் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு விதை பந்துகளை தயார்செய்தனர்.
இந்த நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட அளவில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது