காயல்பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமிய வாலிபர் கொலை..!சென்னை சென்றபோது ஏற்பட்ட கொடூரம்..!

காயல்பட்டணம் அப்பாபள்ளி தெருவைச்சேர்ந்த சகோதரர் மீராதம்மி என்பவர்  காயபட்டணத்திலிருந்து SRM பஸ்ஸில் சென்னை புறப்பட்டு தூத்துக்குடியில் சிறுநீர் கழிப்பதற்க்கு இறங்கும்போது கயவர்களால் கத்தியால் குத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டுல்லார் அவரின் உடல் தூத்துக்குடி GH ல் உள்ளது.

 விரிவான விபரம்:-

காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த ஃபக்ருத்தீன் என்பவரது மகன் மீராத்தம்பி. (வயது 38). சொந்தத் தொழில் செய்து வருகிறார். டாக்டர் அபுல்ஹஸனது சகோதரியின் மகனாவார்.

நேற்று (26.08.2017.) இரவு தனியார் ஆம்னி பேருந்தில் காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தூத்துக்குடியில் குரூஸ் ஃபர்னாந்து சிலையருகில் பேருந்து நிறுத்தப்பட்டதையடுத்து, சிறுநீர் கழிக்க இவர் இறங்கியபோது, அடையாளம் தெரியாத ஒருவர் அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகவும், இதனால் அவர் உடலிலிருந்து ஏராளமான குருதி வெளியேறி, நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக தூத்துக்குடி – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இக்கொலை நிகழ்வு தொடர்பாக பரமன்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு காரணமாக, காயல்பட்டினத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது