அதிரை மக்களின் சுகாதாரத்திற்கு பேரூராட்சியால் விடபட்ட சவால்..!
அதிராம்பட்டினம் மக்களின் சுகாதாரத்திற்கு பேரூராட்சியால் விடப்பட்ட சவாலாக உள்ளது அதிரை தரகர் தெரு (வார்டு 9) அருகே உள்ள பகுதி.

அதிரை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் எதிரே  குப்பைகள் , பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

தற்பொழுது அதிரையில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அப்பகுதியில் சிலருக்கு டெங்கு நோயின் அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது.

ஆனால் தற்பொழுது அதிரை பேரூராட்சியே டெங்கு காய்ச்சல் நோயை வளர்க்கும் விதமாக பல இடங்களில் குப்பைகளை அள்ளாமல் அதிரையை ஒரு நோய் பரப்பும் ஊராக மாற்றும் முயற்சியில் பேரூர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

தற்பொழுது அப்பகுதியில் குப்பைகள் வாய்க்காலில் அடைத்துக்கொண்டு சாக்கடை ரோட்டில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதையும் மீறி இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்காக இருந்து வருகிறது.

சுகாதாரத்தை காக்க வேண்டிய பேரூர் நிர்வாகமே நோய் பரப்பும் நிர்வாகமாக மாறியுள்ளது.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது