முத்துப்பேட்டையில் ரயில் நிலையம் தகுதி இறக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!             
முத்துப்பேட்டையில் இன்று(05/07/2017) மாலை சுமார் 4 மணியளவில் ரயில் நிலையம் தகுதி இறக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ரயில்வே உபயோகிப்பாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முத்துப்பேட்டை ரயில் நிலையம் B கிரேடுலிருந்து D கிரேடாக தகுதி இறக்கம் செய்ததை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பிலும் மக்கள் இந்த போராட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.இதில் சாதி மத வேறுபாடு இன்றி அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது