செக்கடி குளத்திற்கு பம்பிங் முறையில் நீர் வருகை!


அதிரை செக்கடி குளத்திற்கு நசுவினி ஓடையிலுருந்து பம்பிங் மூலம் இன்று காலை 9:00மணிமுதல் தண்ணிர் பாய்ச்சபட்டு வருகிறது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்க்காக அரும்பாடுபட்ட  அதிரை முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் அவர்களின் தலைமையில் பல சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் சேர்மன் அஸ்லம் கூறுகையில்,

நமதூரில் உள்ள குளங்கள் நீரின்றி காய்ந்து  இருந்தது இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு உதவியுடன் பம்பிங் முறையில் நீர் கொண்டு வர குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் நசுவினி ஆற்றில் நிரம்பி வரும் நீரை குழாய் மூலம் கொண்டு சென்று செக்கடி குளத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளோம், என்றும் விரைவில் அனேக குளங்களையும் நிரப்ப முயற்ச்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
 


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது